உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்ரீஜேஷிற்கு ரூ. 2 கோடி * கேரளா அரசு அறிவிப்பு

ஸ்ரீஜேஷிற்கு ரூ. 2 கோடி * கேரளா அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷிற்கு கேரள அரசு ரூ. 2 கோடி பரிசு அறிவித்துள்ளது.பிரான்சில் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஆண்கள் ஹாக்கியில் அசத்திய இந்திய அணி, 1972க்குப் பின் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் (2021, 2024) வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. இதற்கு கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முக்கிய காரணமாக இருந்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என முன்னணி அணிகளை சாய்க்க கைகொடுத்தார். இத்தொடர் முழுவதும் ஜொலித்த இவர், 8 போட்டியில் எதிரணிகள் 12 கோல் மட்டும் அடிக்க விட்டார். ஒலிம்பிக் போட்டியுடன் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீஜேஷ், இந்திய ஜூனியர் அணி பயிற்சியாளராக செயல்பட காத்திருக்கிறார். கேரளாவை சேர்ந்த இவருக்கு, அம்மாநில அரசு ரூ. 2 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள அரசு வெளியிட்ட அறிக்கையில்,' பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற வீரர் ஸ்ரீஜேஷ். இவரை பாராட்டும் வகையில், ரூ. 2 கோடி பரிசுத் தொகை தர அரசு முடிவு செய்துள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை