உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்திய தடகள அணி அறிவிப்பு: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு

இந்திய தடகள அணி அறிவிப்பு: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய தடகள அணி அறிவிக்கப்பட்டது. நீரஜ் சோப்ரா, ஜோதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26 - ஆக. 11) நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள தடகள போட்டிக்கான (ஆக. 1-11) 28 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் 17 வீரர், 11 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 'நடப்பு உலக சாம்பியன்' நீரஜ் சோப்ரா இடம் பிடித்துள்ளார். தமிழகம் சார்பில் பிரவீன் சித்ரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் என 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.இந்திய அணிஆண்கள்: அவினாஷ் (3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்'), நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் ஜெனா (ஈட்டி எறிதல்), தஜிந்தர்பால் சிங் டூர் (குண்டு எறிதல்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர் ('டிரிபிள் ஜம்ப்'), ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட் (20 கி.மீ., நடை போட்டி), முகமது அனாஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், மிஜோ சாக்கோ குரியன் (4x400 மீ., தொடர் ஓட்டம்), சுராஜ் பன்வார் (நடை போட்டி கலப்பு மாரத்தான்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்).பெண்கள்: கிரண் பகால் (400 மீ., ஓட்டம்), பருல் சவுத்தரி (3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்', 5000 மீ., ஓட்டம்), ஜோதி (100 மீ., தடை தாண்டும் ஓட்டம்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), அபா கடுவா (குண்டு எறிதல்), ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பூவம்மா, பிராச்சி (4x400 மீ., தொடர் ஓட்டம்), பிரியங்கா கோஸ்வாமி (20 கி.மீ., நடை போட்டி, நடை போட்டி கலப்பு மாரத்தான்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி