உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பிரக்ஞானந்தா மூன்றாவது இடம் * கடைசி போட்டியில் வெற்றி

பிரக்ஞானந்தா மூன்றாவது இடம் * கடைசி போட்டியில் வெற்றி

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரில் மூன்றாவது இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா.நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. கடைசி, 10வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலகின் 'நம்பர்-2' வீரர், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதினர். இத்தொடரில் இருவரும் ஏற்கனவே மோதிய போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்து இருந்தார்.இம்முறை முதலில் 'கிளாசிக்கல்' முறையில் நடந்த போட்டி 'டிரா' ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'ஆர்மகெடான் டை-பிரேக்கர்' முறை கடைபிடிக்கப்பட்டது. வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, போட்டியின் 31வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் நார்வேயின் கார்ல்சன், அமெரிக்காவின் காருணாவை வென்றார்.10 சுற்று முடிவில் கார்ல்சன் (17.5 புள்ளி) சாம்பியன் ஆனார். நகமுரா (15.5) 2வது, பிரக்ஞானந்தா 3வது இடம் பிடித்தனர்.வைஷாலி 'நான்கு'பெண்களுக்கான தொடர் கடைசி சுற்றில் வைஷாலி, கிராம்லிங் (சுவீடன்) மோதிய போட்டி 'டிரா' ஆனது. முடிவில் சீனாவின் ஜு வென்ஜுன் (19.0) சாம்பியன் ஆனார். உக்ரைனின் அனா முசிசுக் (16.0), சீனாவின் டின்ஜீ அடுத்த இரு இடம் பெற்றனர். வைஷாலி (12.5) நான்காவது இடம் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ