உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / நாயகன் சகாய் * ஒலிம்பிக் கவுன்ட்டவுண்

நாயகன் சகாய் * ஒலிம்பிக் கவுன்ட்டவுண்

ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில், 18வது ஒலிம்பிக் போட்டி (1964, அக். 10-24) நடந்தது. இதன்மூலம் ஆசிய மண்ணில் நடந்த முதல் ஒலிம்பிக் என்ற பெருமை பெற்றது. அல்ஜீரியா, காங்கோ, மலேசியா உள்ளிட்ட 16 நாடுகள் முதன்முறையாக பங்கேற்றன. ஜூடோ, வாலிபால் அறிமுகமாகின. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் (1945, ஆக. 6) குண்டு வீசப்பட்டது. அதே நாளில் ஹிரோஷிமாவில் பிறந்த யோஷினாரி சகாய், துவக்க விழாவின் போது ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்தார். அணுகுண்டு வெடிப்பில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஆண்களுக்கான ஹாக்கி பைனலில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா, 7வது முறையாக தங்கத்தை தட்டிச் சென்றது.36 தங்கம் வென்ற அமெரிக்கா முதலிடத்தையும், போட்டியை நடத்திய ஜப்பான் 16 தங்கத்துடன் 3வது இடத்தையும் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !