உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / நாடு திரும்பினார் அன்டிம்

நாடு திரும்பினார் அன்டிம்

புதுடில்லி: ஒலிம்பிக் கிராமத்தில் சர்ச்சை கிளப்பிய அன்டிம் பங்கல் நாடு திரும்பினார்.ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 53 கிலோ பிரிவில் களமிறங்கினார் இந்தியாவின் அன்டிம் பங்கல் 19. முதல் சுற்றில் தோற்ற இவர், ஒலிம்பிக் கிராமத்துக்கு செல்லாமல், ஓட்டலுக்கு திரும்பினார். பின், தனது அடையாள அட்டையை பயன்படுத்தி, ஒலிம்பிக் கிராமம் சென்று உடைமைகளை எடுத்து வருமாறு,' சகோதரி நிஷாவிடம் தெரிவித்துள்ளார்.பொருட்களை எடுத்து விட்டு திரும்பிய போது, பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். இதுகுறித்து அன்டிமை அழைத்து போலீசார் விசாரித்தனர்.தவிர, அன்டிம் பயிற்சியாளர்கள் விகாஷ், பகத் அங்குள்ள 'டாக்சியில்' பயணித்தனர். குடி போதையில், 'டாக்சி' கட்டணத்தை தர மறுத்து தகராறு செய்தனர். இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் (ஐ.ஒ.ஏ.,) புகார் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அன்டிம், அவரது குழுவை உடனடியாக நாடு திரும்ப, ஐ.ஒ.ஏ., உத்தரவிட்டது. நேற்று அன்டிம் உள்ளிட்டோர் இந்தியா திரும்பினர். விமானநிலையத்தில், சம்பவம் குறித்து எதுவும் பேச மறுத்துவிட்டார்.தடை வருமாஒலிம்பிக் கிராமத்தில் அன்டிம் செய்த குழப்பத்தால், ஐ.ஒ.ஏ., அமைப்புக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அன்டிம், அவரது பயிற்சியாளருக்கு மூன்று ஆண்டு தடை விதிக்கப்படலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !