மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
கோல்கட்டா: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 29-56 என புனேயிடம் வீழ்ந்தது.இந்தியாவில் புரோ கபடி லீக் 10வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்ற புனே அணியை சந்தித்தது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய புனே அணியினர், தமிழ் தலைவாஸ் வீரர்களை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 10-28 என பின்தங்கி இருந்தது.இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணியினரால் எழுச்சி பெற முடியவில்லை. ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 29-56 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இது, தமிழ் தலைவாஸ் அணியின் 12வது தோல்வியானது. தமிழ் தலைவாஸ் அணிக்கு முகமதுரேசா (6 புள்ளி), ஹிமான்ஷு நார்வல் (5) ஆறுதல் தந்தனர். புனே அணிக்கு பங்கஜ் மோகித் (12) கைகொடுத்தார்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025