உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: காலிறுதியில் வேலவன்

ஸ்குவாஷ்: காலிறுதியில் வேலவன்

தோகா: கத்தார் சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் வேலவன், அபய் சிங் முன்னேறினர்.கத்தார் தலைநகர் தோகாவில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், எகிப்தின் உமர் மொசாத் மோதினர். இதில் 'நடப்பு தேசிய சாம்பியன்' தமிழகத்தின் வேலவன் 13-11, 11-3, 9-3 என முன்னிலை வகித்திருந்த போது எகிப்து வீரர் காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து வேலன் 3-0 என வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் அபய் சிங், பிரான்சின் அகஸ்டே டுசூர்ட் மோதினர். இதில் அபய் சிங் 3-2 (11-7, 5-11, 10-12, 11-5, 9-3) என வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை