மேலும் செய்திகள்
கரைபுரளுது லஞ்ச 'ஆறு' கடிவாளம் போடுறது யாரு?
21-Oct-2025
புதுடில்லி: உலக டேபிள் டென்னிஸ் 'பைனல்ஸ்' தொடர் வரும் டிசம்பர் 10-14ல் ஹாங்காங்கில் நடக்க உள்ளது. உலகத் தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் 'டாப்-16', இரட்டையர் பிரிவில் 'டாப்-7' இடம் பிடித்தவர்கள் மட்டும் இதில் பங்கேற்பர். இந்தியாவின் தியா-மனுஷ் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 'நம்பர்-8' ஆக உள்ளது. இருப்பினும் 2025ல் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. துனிஷ் கன்டெண்டர் தொடரில் சாம்பியன், பிரேசில் தொடரில் இரண்டாவது இடம், சென்னை தொடரில் அரையிறுதிக்கு தியா-மனுஷ் ஜோடி முன்னேறியது.தவிர ஐரோப்பா, யு.எஸ்., சிங்கப்பூர் ஸ்மாஷ் தொடர்களில் காலிறுதி வரை சென்றது. இதையடுத்து தியா-மனுஷ் ஜோடி, உலக டேபிள் டென்னிஸ் 'பைனல்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. தவிர, இத்தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய ஜோடி என சாதனை படைத்தனர்.
21-Oct-2025