மேலும் செய்திகள்
தமிழ் தலைவாஸ் அணி தோல்வி: புரோ கபடி லீக் போட்டியில்
16 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
16 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் ஐந்தாவது சீசன் இன்று சென்னையில் துவங்குகிறது. இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யு.டி.டி.,) தொடர் நடத்தப்படுகிறது. சென்னை, டில்லி, கோவா உட்பட 6 அணிகளுடன் இம்முறை கூடுதலாக ஆமதாபாத், ஜெய்ப்பூர் என மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. இதன் ஐந்தாவது சீசன் சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று துவங்குகிறது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடக்கும். ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை (3), மற்றொரு பிரிவில் உள்ள ஏதாவது 2 அணியுடன் தலா ஒரு முறை என மொத்தம் 5 போட்டியில் பங்கேற்கும்.முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (செப். 5, 6) முன்னேறும். இதில் வெல்லும் அணிகள் செப். 7ல் நடக்கவுள்ள பைனலில் பங்கேற்கும். போட்டி எப்படிஒவ்வொரு அணியிலும் தலா 2 வெளிநாட்டு நட்சத்திரங்கள், 4 இந்திய நட்சத்திரம் என 6 பேர் இடம் பெற்றுள்ளனர். 8 அணியில் 12 சர்வதேச, 36 இந்தியர் என மொத்தம் 48 பேர் களமிறங்குகின்றனர்.ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு ஆண்கள் ஒற்றையர், இரண்டு பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர் என 5 ஆட்டம் இருக்கும். இன்று நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கோவா, அறிமுக அணியான ஜெய்ப்பூர் மோதுகின்றன.
16 hour(s) ago
16 hour(s) ago
03-Oct-2025
02-Oct-2025