உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / காலிறுதியில் ராமநாதன் ஜோடி

காலிறுதியில் ராமநாதன் ஜோடி

உக்ஸி: சீன ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார், சீனதைபேயின் ரே ஹோ ஜோடி முன்னேறியது.சீனாவில் ஆண்களுக்கான உக்ஸி ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சீனதைபேயின் ரே ஹோ ஜோடி, ஆஸ்திரேலியாவின் பிளாக் எல்லிஸ், பிளாக் பெய்ல்டன் ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய இந்தியா-சீனதைபே ஜோடி, இரண்டாவது செட்டையும் 6-2 என தன்வசப்படுத்தியது. மொத்தம் 55 நிமிடம் நீடித்த போட்டியில் ராமநாதன், ரே ஹோ ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை