மேலும் செய்திகள்
தேசம் மாறிய அனஸ்டாசியா
05-Dec-2025
இரண்டாவது சுற்றில் ராஹிமோவா
01-Dec-2025
காலிறுதியில் சுமித் நாகல்
25-Nov-2025
டேவிஸ் கோப்பை: இத்தாலி சாம்பியன்
24-Nov-2025
ராஷ்மிகா, சஹாஜா ஏமாற்றம்
15-Nov-2025
பெங்களூரு: பெங்களூரு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சுமித் நாகல் முன்னேறினார்.பெங்களூருவில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், ஹாங்காங்கின் கோலிமன் வோங் மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய சுமித் நாகல், இரண்டாவது செட்டை 7-5 என போராடி தன்வசப்படுத்தினார்.ஒரு மணி நேரம், 45 நிமிடம் நீடித்த போட்டியில் சுமித் நாகல் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, ஜெர்மனியின் மார்க் வால்னர், ஜேக்கப் ஷ்னைட்டர் ஜோடியை சந்தித்தது.இதில் ராம்குமார், மைனேனி ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
05-Dec-2025
01-Dec-2025
25-Nov-2025
24-Nov-2025
15-Nov-2025