உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / காலிறுதியில் ராமநாதன் ஜோடி

காலிறுதியில் ராமநாதன் ஜோடி

தைபே: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் காலிறுதிக்கு ராமநாதன் ஜோடி முன்னேறியது.தைவானில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுவிட்சர்லாந்தின் ரெமி பெர்ட்டோலா, ஆஸ்திரேலியாவின் பிளேக் பேல்டன், வடக்கு ஐஸ்லாந்தின் சின்கிளைர் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை ராமநாதன் ஜோடி 1-6 என இழந்தது. பின் சுதாரித்துக் கொண்ட இந்த ஜோடி, அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றியது. பின் நடந்த 'சூப்பர் டை பிரேக்கரில்' ராமநாதன் ஜோடி 10-6 என அசத்தியது. ஒரு மணி நேரம், 4 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராமநாதன் ஜோடி 1-6, 6-3, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் ராம்குமார் ராமநாதன், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்துடன் மோதினார். இதில் ராமநாதன் 4-6, 6-7 என்ற செட்டில் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை