| ADDED : ஜூலை 28, 2024 11:44 PM
சித்தாமூர் : சித்தாமூர் அருகே முகுந்தகிரி கிராமத்தில், பஞ்சாயுதேஸ்வரி உடனுறை பஞ்சாயுதேஸ்வரர் கோவில் உள்ளது.நாளடைவில் கோவில் சிதிலமடைந்ததால், புதிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கிராமத்தினர், கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர். பின், திருப்பணிகள் முடிந்து, கடந்த மாதம் 16ம் தேதி, கும்பாபிஷேகம் நடந்தது.இதையடுத்து, தினசரி மண்டல அபிஷேகம் நடந்து வந்த நிலையில், நேற்று 48ம் நாள் மண்டல அபிஷேக நிறைவு விழா, 108 சங்கு அபிஷேகத்துடன் நிறைவடைந்தது.அதில், 108 சங்குகளை வைத்து சிறப்பு யாகம் நடத்தி, சங்குகளில் இருந்த புனித நீரால் பஞ்சாயுதேஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், முகுந்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.