உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அடகு கடை பூட்டை உடைத்து 19 சவரன் தங்கம் கொள்ளை

அடகு கடை பூட்டை உடைத்து 19 சவரன் தங்கம் கொள்ளை

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், பெருமாட்டுநல்லூர் ஊராட்சி, தங்கப்பாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம், 54. இவர், பாண்டூர் நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், ஸ்ரீ ஐஸ்வர்யம் பேங்கர்ஸ் என்ற பெயரில், அடகு கடை மற்றும் தங்கம், வெள்ளி வியாபாரம் செய்து வந்தார்.இவரது கடையின் அருகே, பூபதி என்பவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இருவரும் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்றனர்.நேற்று காலை வழக்கம் போல் கடை திறக்க பூபதி வந்துள்ளார். அப்போது, ஜூஸ் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அவரது கடையின் சுவரில் துளையிட்டு, அடகு நகை கடையின் உள்ளே சென்று, 19 சவரன் நகை, 610 கிராம் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிவிட்டு சென்றுள்ளனர்.இது குறித்து, தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், தாம்பரம் பகுதியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கடையில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படாததால், அருகே உள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை