உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கால்வாய் அமைக்கும் பணியில் தகராறு செய்த மூவர் மீது வழக்கு

கால்வாய் அமைக்கும் பணியில் தகராறு செய்த மூவர் மீது வழக்கு

மதுராந்தகம், மதுராந்தகம் நகராட்சி, இரண்டாவது வார்டுக்குட்பட்ட வடசிற்றம்பலம் முருகன் கோவில் பகுதியில், நகராட்சி பொது நிதியின் கீழ், 2024 -- 25ம் நிதியாண்டில், 7.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 100 மீட்டர் நீளத்திற்கு, திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் மற்றும் இரு சிறிய பாலங்கள்அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த கால்வாய் பணி முடிந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மதுராந்தகம் ஏரியிலிருந்து வயல்வெளி பகுதிக்கு நீர் செல்லும் பாசனக் கால்வாயுடன் இணைக்கப்படக் கூடும் எனக் கருதிய விவசாயிகள், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுகுறித்து, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் மேற்பார்வையாளர் புவனராகவேந்திரன், 29, என்பவரிடம், கிராம மக்கள் கேள்வி எழுப்பி, கட்டுமானத்தை நிறுத்தக்கோரினர்.இதனால், மேற்பார்வையாளருக்கும் கிராம விவசாயிகளுக்கும் இடையே வாய்த்தகராறுஏற்பட்டு, பிரச்னை ஏற்பட்டது.இந்நிலையில், மேற்பார்வையாளர் புவனராகவேந்திரன், மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதன்படி, மதுராந்தகம் செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வேணு, 75,கமல், 38, பெருமாள், 35, ஆகியோர் மீது, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி