| ADDED : மே 28, 2024 06:47 AM
திருப்போரூர், : தாழம்பூர், முல்லை நகரை சேர்ந்தவர்கள் வெண்ணிலா, 45, இவரின் கணவர் பாலாஜி, 58. வெண்ணிலா மீன் வியாபாரம் செய்கிறார்.பாலாஜி, அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக தெரிகிறது.நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, கணவன்- - மனைவி இருவருக்கும் இடையே, வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வெண்ணிலா, அவரது கணவரின் இடது பக்க கழுத்தில் கத்தியால் வெட்டினார். இதில் காயமடைந்த பாலாஜியை, அருகே இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வெண்ணிலா, தாழம்பூர் காவல் நிலையத்திற்கு சென்று, நடந்த சம்பவத்தை கூறினார். இது தொடர்பாக, தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.