உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்மருவத்துாரில் நாய் கடித்த நபர் பலி

மேல்மருவத்துாரில் நாய் கடித்த நபர் பலி

மேல்மருவத்துார், : மேல்மருவத்துார் காவல் எல்லைக்குட்பட்ட கிளியா நகர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார். 42. இவர், கடந்த 4ம் தேதி இரவு 8:00 மணியளவில், செம்பூண்டி கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.அப்போது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய், அவரது காலில் கடித்தது. பின், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுள்ளார்.இந்நிலையில், குமரனுக்கு அதிக சர்க்கரை நோய் இருந்ததால், நாய் கடித்த பகுதியில் காயம் ஆறாமல் இருந்ததால், மதுராந்தகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம், உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது. இதனால், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து, மருத்துவமனையில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின்படி, மேல்மருவத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ