உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையின் நடுவில் மின்கம்பம் கடப்பாக்கம் பகுதிவாசிகள் அவதி

சாலையின் நடுவில் மின்கம்பம் கடப்பாக்கம் பகுதிவாசிகள் அவதி

செய்யூர், : செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள மாதா கோவில் பகுதியில், பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து, அப்பகுதிவாசிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், பேரூராட்சி பொது நிதியில் இருந்து, 800 மீட்டர் நீளத்திற்கு, புதிய தார் சாலை அமைக்கும் பணி, சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையிலேயே மின் கம்பங்கள் உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அவற்றை அகற்றி, சாலையோரம் அமைக்க மின்சாரத்துறை அதிகாரிகளிடம் அப்பகுதிவாசிகள் அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில், மின் கம்பங்கள் அகற்றப்படாமலேயே சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடப்பதாக, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையிலேயே உள்ள மின் கம்பங்களை அகற்றிய பின் சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை