உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சித்தாமூர் ஊர்ப்புற நுாலகத்தை மேம்படுத்த வேண்டுகோள்

சித்தாமூர் ஊர்ப்புற நுாலகத்தை மேம்படுத்த வேண்டுகோள்

சித்தாமூர்: சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஊர்ப்புற நுாலகம் இயங்கி வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் உறுப்பினர் களாக உள்ளனர்.மேலும், தினசரி சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் ஏராளமானோர், இந்த நுாலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.நுாலக கட்டடம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், சேதமடைந்து மழைக்காலங்களில் கட்டடத்தின் மேல் பகுதியில் உள்ள விரிசல்கள் வழியாக மழைநீர் கசிந்து புத்தகங்கள் நனைந்து வீணாகின்றன.மேலும், புத்தகங்களை அடுக்கி வைக்க போதிய அலமாரி வசதி இல்லாததால், நுாலகத்திற்கு வரும் புதிய புத்தகங்களை அடுக்கி வைக்க இடமின்றி, தரையிலும், மூட்டை கட்டியும் வைக்க வேண்டிய நிலை உள்ளது.இதனால், வாசகர்கள் விரும்பும் புத்தகங்களை கண்டுபிடிப்பது, பெரும் சவாலாக உள்ளது. அமர்ந்து படிக்க போதிய இடவசதியும், இருக்கைகளும் இல்லாததால் வாசகர்கள் சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சிதிலமடைந்துள்ள நுாலக கட்டடத்தை அகற்றி, மேம்படுத்தப்பட்ட புதிய நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை