உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

திருப்போரூர் அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

திருப்போரூர் : திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி முன்னிலையில், காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.விழாவில், மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது, கலையரங்க கூரையில் பாம்பு ஒன்று சுற்றி வந்தது.இதைப் பார்த்த மாணவியர் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, திருப்போரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கூரை மீது ஏறி பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை