மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
4 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
4 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
4 hour(s) ago
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைக்குன்னம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பயன்பாடு அற்ற கழிப்பறையை இடித்து அகற்ற வேண்டும்என, கோரிக்கை எழுந்துள்ளது.ஆணைக்குன்னம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு, மாணவ - மாணவியருக்கு என, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பறை கட்டடம்,விரிசல் ஏற்பட்டு சேதம டைந்தது. இதன் காரணமாக, ஊராட்சி ஒன்றிய பொது நிதியில், 1.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இதனால், பழைய கழிப்பறை கட்டடம், பயன்பாடு இன்றி பாழடைந்த நிலையில் உள்ளது.பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டு உள்ள கழிப்பறை பகுதி, பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறி வருகிறது.எனவே, பழைய கழிப்பறையை இடித்து அப்புறப்படுத்த, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என, பள்ளி மாணவ - மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago