உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேரூராட்சிகளின் செயல்பாடுகள் மண்டல குழுவினர் சோதனை

பேரூராட்சிகளின் செயல்பாடுகள் மண்டல குழுவினர் சோதனை

மாமல்லபுரம்:காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள மாமல்லபுரம், இடைக்கழிநாடு மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய பேரூராட்சி நிர்வாகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, வேலுார் மண்டல உதவி இயக்குனரை தலைவராகவும், அதே பகுதி பேரூராட்சி செயல் அலுவலர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டனர்.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், வீடுகளில் மட்கும், மட்காத குப்பை சேகரிப்பு, வளம் மீட்பு பூங்காவில் குப்பை கையாளும் மேலாண்மை, குடிநீர் சுகாதாரத் தன்மை, குளோரின் பயன்பாடு, நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு, குடிநீர் வினியோகம் குறித்து, மாமல்லபுரம், இடைக்கழிநாடு ஆகிய பேரூராட்சிகளில், இக்குழுவினர் நேற்று கள ஆய்வு செய்தனர்.மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை, தெரு விளக்கு, கழிப்பறைகள் ஆகியவற்றின் பராமரிப்பு, கணக்கு ஆவண பதிவு, வரிகள், கட்டண வசூல், ஊழியர்கள் வருகை ஆகியவை குறித்தும், ஆய்வு செய்யப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ரகுபதி, அவர்களுக்கு விளக்கினார்.திருக்கழுக்குன்றத்தில், இன்று ஆய்வு செய்கின்றனர். இதுகுறித்த அறிக்கையை, இயக்குனரகத்திற்கு அளிக்க உள்ளதாக, குழுவினர் தெரிவித்தனர். அனைத்து மண்டலங்களிலும் உள்ள முக்கிய பேரூராட்சிகளில் ஆய்வு செய்ய, வேறு மண்டல அலுவலர் குழுக்களை அமைத்து, இயக்குனர் கிரண் குராலா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ