மேலும் செய்திகள்
ஆஞ்சநேயர் ஊஞ்சல் சேவை
11 hour(s) ago
இடிந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரை மீண்டும் அமைக்க கோரிக்கை
11 hour(s) ago
கூடுவாஞ்சேரி: நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, காமராஜபுரம், முத்துமாரியம்மன் கோவில் பின்புறம் ஏழு வீடுகள் உள்ளன. இந்த ஏழு வீடுகளில் வசிப்போருக்கு, கோவில் அருகில் நகராட்சி சார்பில், 10 அடி அளவில் பாதை விடப்பட்டுள்ளது.மேலும், இந்த வழிப்பாதையில், நகராட்சி சார்பில் சிமென்ட் சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவர், அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று, நகராட்சி சார்பில் போடப்பட்டுள்ள சிமென்ட் சாலையை உடைத்து, ஐந்தடி அகலத்திற்கு படிக்கட்டு கட்ட முயன்றுள்ளார்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, பொது வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்ட முயன்ற பாஸ்கர் மீது வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago