உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போக்குவரத்து விதிகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு

போக்குவரத்து விதிகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு

மதுராந்தகம்:கடந்த 10 நாட்களுக்குமுன், மதுராந்தகம் அருகே கன்டெய்னர் லாரி மீது தனியார் பேருந்து உரசியதில், தனியார் கல்லுாரியை சேர்ந்த நான்கு மாணவர்கள் சம்பவ இடத்திலேயேபலியாகினர்.பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால் ஏற்பட்ட இந்த விபத்தில், மாணவர்கள் உயிரிழந் தனர்.இதன் காரணமாக,கல்லுாரி நிர்வாகத்தின் சார்பில், மாணவ - மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிகழ்வில் பங்கேற்ற மதுராந்தகம்போக்குவரத்து ஆய்வாளர்மணிமாறன் கூறியதாவது:மாணவர்கள் போக்கு வரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.பேருந்தின் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, அளவான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும்இவ்வாறு அவர்கூறினார்.இந்நிகழ்வில், கல்லுாரி நிர்வாகத்தினர்மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்