உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்சாரம் பாய்ந்து பீஹார் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பீஹார் தொழிலாளி உயிரிழப்பு

புதுப்பட்டினம்:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப், 31. கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் ரஹ்மத் நகரில் இயங்கி வரும் தனியார் 'ஹாலோபிளாக்' தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை 9:30 மணிக்கு, மின்சாரத்தில் இயங்கும் கல் அறுக்கும் இயந்திரத்தை கையாண்டபோது, உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவரை மீட்டு, புதுப்பட்டினம் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த கல்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை