உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரவுடிக்கு துப்பாக்கி வழங்கிய பா.ஜ., நிர்வாகிக்கு குண்டாஸ்

ரவுடிக்கு துப்பாக்கி வழங்கிய பா.ஜ., நிர்வாகிக்கு குண்டாஸ்

செங்கல்பட்டு:ரவுடிக்கு கள்ளத் துப்பாக்கி வழங்கிய வழக்கில், பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாநில செயலரின் ஜாமின் மனுவை, வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் சத்யா என்கிற சீர்காழி சத்யா, 41. ரவுடி. இவர், சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ., மாநில வழக்கறிஞர் பிரிவு செயலர் அலெக்ஸிஸ் சுதாகர், 50, என்பவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக, கடந்த 28ம் தேதி மாமல்லபுரம் வந்தார்.அதுபற்றி தகவல் அறிந்த போலீசார், செங்கல்பட்டு பழவேலி பகுதியில்,சத்யாவை சுட்டு மடக்கி பிடித்தனர். அப்போது, சத்யா துப்பாக்கி வைத்து போலீசாரை மிரட்டியுள்ளார். சத்யாவுக்கு கள்ளத் துப்பாக்கி வழங்கியதாக, அலெக்ஸிஸ் சுதாகரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கில், வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகருக்கு ஜாமின் வழங்கக்கோரி, அவரது வழக்கறிஞர்கள், செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், கடந்த 2ம் தேதி மனுதாக்கல்செய்தனர்.இம்மனு, முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமின் மனு மீதானவிசாரணையை, வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து,நீதிபதி உத்தரவிட்டார்.அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமுருகன்ஆஜரானார்.இந்நிலையில், ரவுடிக்கு கள்ளத் துப்பாக்கி வழங்கியது உட்பட, அலெக்ஸிஸ் சுதாகர் மீது, மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு எஸ்.பி., சாய் பிரணீத்பரிந்துரை செய்தார்.இதனையேற்று, அலெக்ஸிஸ் சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் அருண்ராஜ் நேற்று உத்தரவிட்டார். சென்னை புழல் சிறையில் உள்ள அவரிடம், குண்டர் சட்ட நகலை மாமல்லபுரம் போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை