உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரியில் கார்கள் மோதல் டிரைவர்கள் வாக்குவாதத்தால் நெரிசல்

கூடுவாஞ்சேரியில் கார்கள் மோதல் டிரைவர்கள் வாக்குவாதத்தால் நெரிசல்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில், சென்னை தாம்பரத்தில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி டிராவல்ஸ் நிறுவன கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே வந்த போது, முன்னே சென்ற பேருந்து மீது மோதாமல் தவிர்க்க, அதன் டிரைவர் திடீர் பிரேக் பிடித்து காரை நிறுத்தினார்.அப்போது, பின்னால் வந்த மற்றொரு கார், டிராவல்ஸ் கார் மீது மோதியது. இதில், டிரவால்ஸ் காரின் பின்பகுதி சேதமடைந்தது. அதனால், இரு கார்களின் டிரைவர்களுக்கும் இடையே, கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.டிராவல்ஸ் கார் டிரைவர் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த வாடகை கார் டிரைவர்கள், மோதிய கார் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது தொடர்பாக, அப்பகுதிவாசிகள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார், இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை