உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கள்ளத்தொடர்பு பிரச்னை மனைவி, காதலனுக்கு அடி

கள்ளத்தொடர்பு பிரச்னை மனைவி, காதலனுக்கு அடி

சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த நத்தம் கரியச்சேரியைச் சேர்ந்தவர் சண்முகம், 40. இவரது மனைவி மஞ்சுளா, 36. நெய்குப்பியைச் சேர்ந்த தீனதயாளன், 29, என்பவருடன், இவருக்கு ஓராண்டாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.கணவர் எச்சரித்தும், மனைவி கள்ளத்தொடர்பை கைவிடாமல், தீனதயாளனுடன் விடுதியில் தங்கியதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், சண்முகம், அவரது உறவினர்கள் சேகர் உள்ளிட்டோர், தீனதயாளன் மற்றும் மஞ்சுளாவை கல், கட்டையால் தாக்கினர்.அதில் காயமடைந்த அவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, சதுரங்கப்பட்டினம் போலீசில் தீனதயாளன் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை