உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காணிக்கை தலைமுடி சேகரிப்பு ரூ.53.62 லட்சத்திற்கு ஏலம்

காணிக்கை தலைமுடி சேகரிப்பு ரூ.53.62 லட்சத்திற்கு ஏலம்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், காணிக்கை தலைமுடி சேகரிப்பதற்கான உரிமம் பெறுவதற்கான ஏலம், நேற்று நடந்தது. அதில், 53.62 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.திப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கடந்த 12ம் தேதி நடந்த ஓராண்டுக்கான ஏலத்தில், பிரசாத கடை 46.30 லட்சம் ரூபாய்க்கும், தற்காலிக கடை 1.50 லட்சம் ரூபாய்க்கும், வாகன நிறுத்தம் கட்டணம் 4.10 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.மேலும், ஆடு, கோழி சேகரிப்பதற்கான ஏலம் 83,000 ரூபாய்க்கும், வெள்ளி உரு விற்பனை செய்யும் உரிமம் 1.20 லட்சம் ரூபாய்க்கும், நெய் தீபம் விற்பதற்கான உரிமம் 22.01 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது.இதில், காணிக்கை தலைமுடி சேகரிப்பு உரிமம், சிதறு தேங்காய், உப்பு, மிளகு சேகரிப்பு உரிமத்திற்கான ஏலம், குறைந்த தொகைக்கு கேட்கப்பட்டதால் தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தலைமுடி சேகரிப்பு உரிமம் மற்றும் சிதறு தேங்காய், உப்பு, மிளகு சேகரிப்பு உரிமத்திற்கான ஏலம், செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் குமரவேல் முன்னிலையில், நேற்று நடந்தது.இதில், காணிக்கை தலைமுடி சேகரிப்பு உரிமம் ஏலம் 53.62 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. சிதறு தேங்காய், உப்பு, மிளகு சேகரிப்பு உரிமத்திற்கான ஏலம்,யாரும் கேட்காததால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S. Gopalakrishnan
ஜூன் 20, 2024 23:06

சிதறு தேங்காய் வெளியிடத்தில் உடைக்கப்பட்டு பக்தர்கள் எடுத்து சாப்பிட வேண்டும். அதை தொட்டிக்குள் உடைத்து அதை சேகரம் செய்ய உலமா ? கலிகாலம் !


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை