உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் சோதனை

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் சோதனை

கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் மாலை, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.பேருந்து நிலையத்தில், பயணியருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைப்படும் வசதிகள் குறித்தும், பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறதா, விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்பது குறித்தும், பேருந்து நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, பயணியரின் வசதிக்காக, புதிதாக நிறுவப்பட்டுள்ள வங்கி ஏ.டி.எம்., மையம் மற்றும் நாணயம் செலுத்தி துணிப்பை பெறும் இயந்திரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நிர்வாக இயக்குனர் பார்த்திபன், தாம்பரம் வருவாய் அலுவலர் சிராஜ்பாபு, வண்டலுார் தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை