| ADDED : ஆக 03, 2024 10:44 PM
செங்கல்பட்டு:சுதந்திர தின விழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியில் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சுதந்திர தின விழா நடத்துவதற்கான, அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் ஒருங்கிணைந்து, மக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியை கவனமுடன் செயல்படுத்த வேண்டும். மேலும், சீரான மின்சாரம் தடையின்றி வழங்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழா நடைபெறும் பகுதியில், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழா தொடர்பாக, சப்- - கலெக்டருடன் இணைந்து, கல்வித்துறை செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து, கலெக்டர் எடுத்துரைத்தார்.