உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பவுஞ்சூரில் சாலை விபத்து கல்லுாரி மாணவன் பலி

பவுஞ்சூரில் சாலை விபத்து கல்லுாரி மாணவன் பலி

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த தட்டாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் யோகநாதன், 19. செங்கல்பட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ., கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இவரின் நண்பர் மகேஷ்வரன், 22. இருவரும், நேற்று அப்பாச்சி இருசக்கர வாகனத்தில், பவுஞ்சூர் சென்று வீடு திரும்பியுள்ளனர்.நெல்வாய்பாளையம் அருகே கண்டிகை சாலை சந்திப்பில், அதிவேகமாக சென்றதால் கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில், யோகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மகேஷ்வரனுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. சாலையில் சென்றவர்கள் இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு, யோகநாதனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகேஷ்வரன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து, அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி