உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை குறைதீர் கூட்டத்தில் நுகர்வோர் புகார்

கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை குறைதீர் கூட்டத்தில் நுகர்வோர் புகார்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி தலைமையில், நேற்று நடந்தது.கூட்டத்தில் நுகர்வோர் பேசியதாவது:காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும்போது, சிலிண்டரை எடைபோட்டும், காஸ் கசிவு கருவி வாயிலாக சிலிண்டரை சோதனை செய்தும் வழங்க வேண்டும்.கள்ளச்சந்தையில் காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிலிண்டர் பயன் படுத்துவது தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மொபைல் போன் பழுது ஏற்பட்டால், காஸ் பதிவு செய்ய, ஏஜன்டுகள் மறுத்து விடுகின்றனர்.இதனால், காஸ் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. வீடுகளுக்கு குழாய் வழியாக காஸ் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.மாவட்ட வருவாய்அலுவலர் சுபா நந்தினி கூறியதாவது:மாவட்டத்தில், சிலிண்டர் பயன்படுத்துவது தொடர்பாக, சனிக்கிழமைதோறும் ரேஷன் கடைகள் அருகில், சம்பந்தப்பட்ட முகவர்கள் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இந்த முகாம் குறித்து, அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மொபைல் போன் பழுது ஏற்பட்டாலும், காஸ் புத்தகத்தை வைத்து பதிவு செய்து கொள்ளலாம்.கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை தொடர்பான புகார் குறித்து, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ