உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அணுபுரம் கழிவுநீரை ஏரியில் விடுவதாக புகார்

அணுபுரம் கழிவுநீரை ஏரியில் விடுவதாக புகார்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகா, வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு ஜமாபந்தி, செங்கல்பட்டு, கலால் உதவி ஆணையர் ராஜன்பாபு தலைமையில், நேற்று முன்தினம் துவங்கியது.கடந்த இரு நாட்களும், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய உள்வட்ட பகுதியினரிடம் மனுக்கள் பெறப்பட்டன.கல்பாக்கம் அடுத்த குன்னத்துாரில் உள்ள ஏரியில், அணுசக்தி துறையின் அணுபுரம் கழிவுநீர் விடப்படுவதால், ஏரி மாசடைவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், அப்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.அதனால், ஏரியில் கழிவுநீர் விடாமல் தடுக்கக்கோரி, ஊராட்சித் தலைவர் ஏழுமலை உள்ளிட்டோர், ஜமாபந்தியில் மனுஅளித்தனர்.திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி மற்றும் அதிகாரிகள், இதுகுறித்து உடனடியாகநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ