உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வி.ஏ.ஓ., அலுவலகம் சேதம் புதுப்பாக்கத்தில் பாதிப்பு

வி.ஏ.ஓ., அலுவலகம் சேதம் புதுப்பாக்கத்தில் பாதிப்பு

திருப்போரூர் : புதுப்பாக்கம் கிராமத்தில், சேதமான வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.திருப்போரூர் ஒன்றியம், வண்டலுார் வட்டத்தை சார்ந்த புதுப்பாக்கம் கிராமத்தில், வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது.இந்த அலுவலக கட்டடம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பின்றி, வி.ஏ.ஓ., கட்டடத்தின் கூரை, அடித்தளம் உள்ளிட்ட பகுதிகளில், சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.மேலும், மழைக்காலங்களில் அலுவலகத்தில் மழைநீர் கசிவதால், உள்ளே அமர்ந்து பணியாற்ற முடியாத நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, கிராமம் சார்ந்த ஆவணங்கள், இருக்கைகளை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே, சேதமான வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை