உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவில் பகுதியில் அவசர சிகிச்சை மையம் திறக்க முடிவு

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் அவசர சிகிச்சை மையம் திறக்க முடிவு

செங்கல்பட்டு:சிங்கபெருமாள் கோவிலில் விபத்து மற்றும் அவரச சிகிச்சை மைய கட்டடம், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு பின் திறக்கப்பட உள்ளதாக, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பரணிதரன் தெரிவித்தார்.சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில், தேசிய கிராம சுகாதார திட்டத்தில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் கட்ட, 2022ம் ஆண்டு, 4 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.தொடர்ந்து, விபத்து மற்றும் அவரச சிகிச்சை மையம், அதே ஆண்டு, ஏப்., மாதம் பணிகள் துவங்கி, கடந்த ஆண்டு, ஏப்., மாதம் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன.இந்த மையத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, நம் நாளிதழில் கடந்த 2ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.இது குறித்து, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பரணிதரன் கூறியதாவது:விபத்து மற்றும் அவரச சிகிச்சை மையத்திற்கு கட்டடம் கட்டப்பட்டது. மருத்துவ உபகரணங்களும் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால், கட்டடம் திறக்கப்படவில்லை.ஜூன் 4ம் தேதிக்கு பின், டாக்டர், செவிலியர்கள் நியமிக்க, அரசுக்கு பரிந்துரை செய்து, விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை