உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலைக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரிக்கை

சாலைக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரிக்கை

திருப்போரூர்:மாமல்லபுரம் - -எண்ணுார் துறைமுகம் வெளிவட்ட சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என, கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.மாமல்லபுரத்தில் இருந்து எண்ணுார் துறை முகம் வரை, திருப்போரூர் வட்டம் சார்ந்த கிராமங்கள் வழியாக, 110 கி.மீ., துாரத்திற்கு வெளிவட்டச் சாலை அமைக்க, மத்திய அரசு, கடந்த 2013ம் ஆண்டு முடிவு செய்தது.இப்பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.திருப்போரூர் வட்டத்தில், பூண்டி, ராயமங்கலம், எடர்குன்றம் உள்ளிட்டகிராமங்களில், மேற்கண்ட வெளிவட்ட சாலை பணிக்காக,விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவருகின்றன.நிலத்திற்கான இழப்பீட்டு தொகை மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, விவசாயிகளுக்கு தொகை வழங்கபட்டுவருகிறது.எனினும், அவை போதாது என்றும், கூடுதல்இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை