உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய சமுதாய நலக்கூடம் கீரல்வாடியில் கோரிக்கை

புதிய சமுதாய நலக்கூடம் கீரல்வாடியில் கோரிக்கை

சித்தாமூர்:சித்தாமூர் அருகே கீரல்வாடி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, மக்கள் பயன்பாட்டிற்காக, 1984ம் ஆண்டு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.சித்திரவாடி, அகத்திப்பட்டு, சிறுநல்லுார் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களது குடும்பங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை, இந்த சமுதாய கூடத்தில் நடத்தி வந்தனர்.முறையான பராமரிப்பு இல்லாததால், கடந்த 15 ஆண்டுகளாக, சமுதாய நலக்கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்த விருப்பம் காட்டாமல், சமுதாய நலக்கூடம் சீரழிந்தது. தற்போது, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனால், அப்பகுதிவாசிகள் தங்களின் குடும்ப சுப நிகழ்ச்சிகளை நடத்த, மண்டபம் தேடி சித்தாமூர், பவுஞ்சூர், மதுராந்தகம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சமுதாய நலக்கூடத்தை அகற்றி, புதிய சமுதாய நலக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ