உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாநகராட்சியை ஏமாற்றிய எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சீல்

மாநகராட்சியை ஏமாற்றிய எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சீல்

குரோம்பேட்டை:குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, 'ஷாஸ்' என்ற எலக்ட்ரானிக்ஸ் கடை உள்ளது. 'டிவி, ப்ரிஜ், வாஷிங்மிஷின்' உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் விற்கப்படுகின்றன.இந்த கடை, தாம்பரம் மாநகராட்சியிடம் தொழில் உரிமத்தை புதுப்பிக்காமல், எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருவது, சமீபத்தில் தெரியவந்தது.இதையடுத்து, மாநகராட்சி சார்பில், மூன்று எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. கடைகாரர், அப்போதும் உரிமம் புதுப்பிக்க முயற்சி செய்யவில்லை.இதையடுத்து, 2வது மண்டல சுகாதார அலுவலர் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளர் லட்சுமிகணேஷன் ஆகியோர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று, அந்த கடைக்கு, நேற்று 'சீல்' வைத்தனர்.தொடர்ந்து, முறைப்படி ஆவணங்களுடன் விண்ணப்பித்து, தொழில் உரிமத்தை புதுப்பித்தவுடன், 'சீல்' அகற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை