உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சென்னை திரும்பிய வெளியூர்வாசிகள்; புறநகரில் போக்குவரத்து நெரிசல்

சென்னை திரும்பிய வெளியூர்வாசிகள்; புறநகரில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்கி உள்ளனர்.இவர்கள் வார இறுதி நாட்களில், விடுமுறையை முன்னிட்டு, கடந்த 3ம் தேதி மாலை சொந்த ஊர்களுக்கு சென்றனர். நேற்று விடுமுறை முடிந்ததை தொடர்ந்து, மாலை சென்னை திரும்பினர். இதன் காரணமாக, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன. சிங்கபெருமாள் கோவில், பரனுார் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.செங்கல்பட்டு பாலாற்றில், அடுத்தடுத்து வந்த நான்கு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, யாரும் காயமின்றி தப்பினர். தகவலறிந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ