உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தனியார் பள்ளியில் தீ விபத்து

தனியார் பள்ளியில் தீ விபத்து

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள ஒரு அறையில், தேவையில்லாத அட்டை பெட்டிகள் உட்பட, சில பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில், நேற்று இரவு 8:00 மணிக்கு, அந்த அறையில் மின் கசிவு காரணமாக, திடீரென தீ பிடித்தது.தகவல் அறிந்து வந்த திருப்போரூர் தீயணைப்பு துறையினர், தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அறையில் இருந்த தேவையற்ற அட்டை பெட்டிகள், தீயில் எரிந்து நாசமாகின. அறையின் கூரையில் அமைக்கப்பட்ட பால் சீலிங் அலங்காரம், தீயில் சேதமானது.இதுதொடர்பாக, திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ