உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அச்சிறுபாக்கம் நெடுஞ்சாலை ஓரம் எரிக்கப்படும் குப்பைக் கழிவுகள்

அச்சிறுபாக்கம் நெடுஞ்சாலை ஓரம் எரிக்கப்படும் குப்பைக் கழிவுகள்

அச்சிறுபாக்கம், : அச்சிறுபாக்கம் அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இரட்டைமலை சீனிவாசன் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.இதன் அருகே, சாலை ஓரம் உள்ள புளிய மரங்களின் கீழே, ஹோட்டல் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைக் கழிவுகள் போன்றவற்றை, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர்.இந்த குப்பைக் கழிவுகளை சிலர் தீயிட்டு எரித்து விடுகின்றனர். மீண்டும், அதே பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்ந்து நிகழ்கிறது.மீண்டும் மீண்டும் குப்பை கொட்டி எரிக்கப்படுவதால், சாலையோரம் உள்ள புளிய மரங்கள் தீயில் கருகி வீணாகின்றன.மேலும், இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் பயணியர் கண் எரிச்சல், குமட்டல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்படுவதாக தெரிவிக்கின்றனர்.எனவே, தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைக் கழிவுகளை அகற்றி, மீண்டும் குப்பைக் கழிவுகள் கொட்டாதவாறு, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை