| ADDED : ஜூன் 08, 2024 12:31 AM
மறைமலை நகர்,:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் ஆறுவழி மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ., துாரம் உடையது.இந்த சாலையை, கொளத்துார், ஆப்பூர், திருக்கச்சூர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில், ஆப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணல் திட்டுகள், பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது. அவை, சர்வீஸ் சாலையில் சரிந்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.இரவு நேரங்களில், சரக்கு வாகனங்களில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை கோணிகளில் கொண்டு வரும் மர்ம நபர்கள், சாலை மையத்தில் கொட்டி செல்கின்றனர்.இதன் காரணமாக, சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.எனவே, இந்த குப்பையை அகற்றவும், சாலையில் படித்துள்ள மணல் குவியல்களை அகற்றவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.