உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி - கோயம்பேடு புதிய மாநகர பேருந்து சேவை

கூடுவாஞ்சேரி - கோயம்பேடு புதிய மாநகர பேருந்து சேவை

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து, வண்டலுார், தாம்பரம், திருப்போரூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு, மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தினமும், 80க்கும் மேற்பட்ட பேருந்துகள், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப் பட்டு வருகின்றன. ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், வண்டலுார் வழியாக, கோயம்பேடிற்கு தடம் எண் 104சி என்ற புதிய பேருந்து, நேற்று முதல் இயங்கத் துவங்கியது.ஏற்கனவே, கூடு வாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து, கோயம்பேடிற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக புதிய பேருந்து இயக்கப்படுவது, அப்பகுதி பயணியரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை