மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
1 hour(s) ago
கூடுவாஞ்சேரி,:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நான்காவது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி அவென்யூ விரிவு பகுதியில், காலி மனைகள் உள்ளன.குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலி மனைகள் புதர் சூழ்ந்து உள்ளதால், அப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கூடுவாஞ்சேரி பாலாஜி அவென்யூ பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில், தனி நபர்களுக்கு சொந்தமான காலி மனைகள் உள்ளன.அவற்றை முறையாக பராமரிக்காததால், முள் செடிகள்அடர்ந்து, புதர் சூழ்ந்து காணப்படுகின்றன.அதனால், அப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம்அதிகரித்துள்ளது. அருகிலேயே பூங்காவில் விளையாடும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு, அப்பகுதியில் உலவும் பாம்புகளால் அச்சுறுத்தல் உள்ளது.மேலும், காலி மனையில் உள்ள முள் செடிகளுக்கு இடையில், மாலை நேரத்தில் போதை ஆசாமிகள் அமர்ந்து, மது அருந்துகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன், இப்பகுதியில் ஒருவர்பாம்பு தீண்டி பாதிக்கப்பட்டார்.எனவே, குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலி மனைகளை, அவற்றின் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்க வேண்டும்.அதற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago