உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆலத்துார் சிட்கோவில் முன்னுரிமை உள்ளூர் இளைஞர்கள் கோரிக்கை

ஆலத்துார் சிட்கோவில் முன்னுரிமை உள்ளூர் இளைஞர்கள் கோரிக்கை

திருப்போரூர்:ஆலத்துார் சிட்கோவில், அப்பகுதியில் படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, அப்பகுதியின், 2வது வார்டு கவுன்சிலர் சாவித்திரி, ஜமாபந்தியில் மனு அளித்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய ஆலத்துார் ஊராட்சியில், 900 குடும்பங்கள் உள்ளன.இதில், படித்த இளைஞர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். உள்ளூரில், 34 தொழிற்சாலைகள் இருந்தும், படித்த இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.இங்குள்ள தொழிற்சாலை நிறுவனத்தினர், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்காமல், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வேலையாட்களை தேர்வு செய்து பணியமர்த்துகின்றனர்.இதனால், உள்ளூரில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல், இவர்கள் வெகுதுாரம் சென்று பணி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, இந்த ஊராட்சி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள 34 தொழிற்சாலைகளில், வேலை வாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்க ஆவன செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை