| ADDED : ஜூலை 31, 2024 04:34 AM
மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் கல்வி வட்டார அளவில், பல்வேறு விளையாட்டு போட்டிகளை, வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி ஒருங்கிணைத்து, வெவ்வேறு பகுதிகளில் நடத்துகிறது.நேற்று, மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பூப்பந்து விளையாட்டு போட்டி, 14, 17, 19 ஆகிய வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் பிரிவுகளில் நடத்தப்பட்டது. அரசு, தனியார் என, 10 பள்ளிகளைச் சேர்ந்த, 150 மாணவ - மாணவியர் விளையாடினர். 14 வயது ஆண்கள் பிரிவில், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் பிரிவில், மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி குழுவினர் வென்றனர்.மேலும், 17 வயது ஆண்கள் பிரிவில், மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் பிரிவில், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி குழுவினர் வென்றனர்.தொடர்ந்து நடந்த, 19 வயது ஆண்கள் பிரிவில், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் பிரிவில், மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி குழுவினர் வென்றனர். வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவியர், மாவட்ட அளவிலான போட்டியில் விளையாடுவர்.