உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முட்டுக்காடு தேசிய நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டமளிப்பு

முட்டுக்காடு தேசிய நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டமளிப்பு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த முட்டுக்காட்டில், ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் இயங்கி வருகிறது.இந்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வகையான மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும், இந்நிறுவனத்தில், மாற்றுத்திறனாளிகளை பராமரித்தல், மறுவாழ்வு மற்றும் சிறப்பு கல்வி சம்பந்தமான பல்வகையான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இந்த படிப்புகளில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும், 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர்.இந்நிறுவனத்தில் படித்து முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது.இதில், தலைமை விருந்தினராக, தமிழக மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் நீதிபதி பாஸ்கரன் பங்கேற்று, 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.கவுரவ விருந்தினராக, இந்திய கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி டோனி மைகேல் மற்றும் தமிழக ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் கணேசன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.நிறுவன இயக்குனர் நசிகேதா ரவுட், துணைப்பதிவாளர் அமர்நாத், துறைத்தலைவர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி