உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வல்லிபுரம் அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம்

வல்லிபுரம் அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கியது. இங்கு, எட்டாம் வகுப்பு முடித்தவர்கள், உயர்நிலை, மேல்நிலை வகுப்பு பயில, பொன்விளைந்தகளத்துார், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்றனர்.இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துமாறு, இப்பகுதியினர் வலியுறுத்திய நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவ்வாறே தரம் உயர்த்தப்பட்டது.அதைத்தொடர்ந்து, பள்ளி கட்டடங்கள் கட்ட, 4.5 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது. 2023 - 24, செய்யூர் தொகுதி மேம்பாட்டு நிதி, 97 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டடம், தற்போது கட்டப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை