உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வேட்டைக்காரகுப்பத்தில் அமைப்பு

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வேட்டைக்காரகுப்பத்தில் அமைப்பு

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே உள்ள வேட்டைக்காரகுப்பம் ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன் ஊராட்சியில் பொது நிதி, கனிமவள நிதி என, சுமார் 1 கோடி ரூபாய் இருந்தது.ஊராட்சியில் போதிய நிதி இருந்தும், பாண்டுரங்கபுரம் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி, வேட்டைக்காரகுப்பம் காலனி பகுதியில் உள்ள மேல்நிலை தேக்க தொட்டி சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தன.மேலும், மழை நீர் கால்வாய், சாலைகள் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் பொது நிதி, கனிமவள நிதியில் இருந்து புதிய மேல்நிலை தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.அதன் விளைவாக, வேட்டைக்காரகுப்பம் காலனி பகுதியில், கனிமவள நிதியில் இருந்து, 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிந்து, விரைவில் புதிய மேல்நிலை தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ